காரைச் செடிகள் சூழ்ந்த பகுதியாதலால் இத்தலம் 'கச்சிநெறிக் காரைக்காடு' என்று அழைக்கப்படுகிறது.
மூலவர் 'காரைத்திருநாதேஸ்வரர்' அழகிய லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். இவருக்கு 'சத்யநாதேஸ்வரர்' என்ற திருநாமமும் உண்டு. காஞ்சிபுரத்தில் 'காமாட்சி' அம்மனுக்கு தனிக் கோயில் உள்ளதால் இங்கு உள்ள எந்த சிவன் கோயிலுக்கும் அம்மன் சன்னதி கிடையாது. ஆனால் இக்கோயிலில் 'காரார்குழலி' என்னும் திருநாமத்துடன் அம்பிகையின் உற்சவத் திருமேனி உள்ளது.
பிரகாரத்தில் விநாயகர், வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமண்யர், புதன், இந்திரன் ஆகியோர் தரிசனம் தருகின்றார்.
இந்திரன், புதன் ஆகியோர் வழிபட்ட தலம்.
திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.
|